TNPSC Group 4 Result 2022 வரும் ஜனவரியில் வெளியீடு மேலும் 2500 காலிப்பணியிடம் அதிகரிப்பு

TNPSC Group 4 Result 2022 வரும் ஜனவரியில் வெளியீடு மேலும் காலிப்பணியிடம் 2500 அதிகரிப்பு

tnpsc
TNPSC GROUP 4 Result 2022

TNPSC Group 4 Exam 2022

Tamil Nadu public service commission conducted the examination for Group 4 category & VAO post  on July 2022, vacancy 7301 .Tamil Nadu Government jobs. 

TNPSC Group 4 Result 2022

டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம்  குரூப் 4 மற்றும் கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கு கடந்த ஜூலை 2022 ல் 7301 காலிப்பணியிடங்களுக்கு  தேர்வை நடத்தியது. 
இந்த தேர்வுக்கு பத்தாம் வகுப்பு தகுதி என்பதால் 20 லட்சம் பேர் விண்ணப்பம் செய்தனர். ஆனால் 18.5 லட்சம் பேர்  தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. இதற்கான தேர்வு முடிவுகள் ஆகஸ்டில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் உயர் நீதிமன்றத்தில் பெண்கள் இட ஒதுக்கீடு முறை சரியாக பின்பற்ற வில்லை என்று வழக்கு தொடரப்பட்டது. 
பெண்கள் இட ஒதுக்கீடு முறை சரியாக பின்பற்ற சொல்லி தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்திற்கும் உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிட காலதாமதம் ஆகும் என்பதால். டிசம்பர் 2022 ல் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் டிசம்பர் மாதம் வெளிவரவில்லை. 
இதற்கிடையில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்ததாக ஊடகங்கள் வழியாக நமக்கு முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வரும் ஜனவரி 15,2023 க்கு பிறகு நிச்சயம் வெளியிடப்படும் என்றும். மேலும் குரூப் 4 காலிப்பணியிடம் ஏற்கெனவே அறிவித்துள்ள 7301 காலிப்பணியிடங்களுடன்  2500 காலிப்பணியிடம் சேர்த்து 9870 ஆக அதிகரித்து அதன் அடிப்படையில் விரைவில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. 
மேலும் 2500 பணியிடம் அதிகரிப்பு போக இன்னும் சில துறைகளின் காலிப்பணியிடமும் இந்த குரூப் 4 தேர்வில் சேர்க்கும் பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் மொத்தமாக 10 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. 
தேர்வு முடிவுகள் தெரிந்துகொள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அதிகார பூர்வ இணையத்தை பார்க்கவும்.. 

TNPSC Group 4 Cut Off 2022 குறைய வாய்ப்பு

காலிப்பணியிடம் அதிகரித்துள்ளதால் தேர்வர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். கூடுதலாக 2500 பேர் அரசு பணி பெற உள்ளனர். Cut Off குறைவாக எடுத்து , எல்லைக்கோட்டுக்கு பக்கமாக  நமக்கு வேலை கிடைக்குமா கிடைக்காதா? என்று சந்தேகத்தோடு காத்து இருந்த தேர்வர்களுக்கு இது நிச்சயமாக மகிழ்ச்சி செய்தியாக இருக்கும். அவர்களுக்கு அரசு பணி உறுதி. Cut off  நிச்சயம் குறையும் என்பதில் சந்தேகமில்லை. 

Leave a Reply