DOWNLOAD TNPSC ANNUAL PLANNER 2022 PDF
தேர்வுகள் அனைவருக்கும் வணக்கம்!
தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் ( tnpsc) முக்கிய அறிவிப்புகள் வெளியிட்டுள்ளது.
கடந்த 07.12.2021 அன்று tnpsc தேர்வாணைய தலைவர் பாலச்சந்திரன் அவர்கள் பத்திரிகை செய்தியாளர்களை நேரில் சந்தித்து tnpsc நடத்தும் தேர்வுகள் பற்றியும். 2022 ஆம் ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ள 32 தேர்வுகள் மற்றும் அவற்றின் அறிவிப்புகள் எப்பொழுது என்று அறிவித்தார்.
அதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது
தமிழ் தகுதி தேர்வு அனைத்து தேர்விலும் எப்படி வைக்கப்படும் என்றும் அறிவித்தார். மற்றும் பல லட்சம் மாணவர்கள் எதிர்பார்க்கும் tnpsc group 1,2,2a மற்றும் tnpsc group 4 தேர்வுகள் எப்பொழுது அறிவிக்கப்படும் என்றும் அதற்கு காலிப்பணியிடம் குறித்தும் அறிவித்தார். அதில் முக்கிய விவரங்கள் பின்வருமாறு.
TNPSC GROUP 1,2,4 NOTIFICATION
EXAM NAME | NOTIFICATION |
---|---|
TNPSC GROUP 2,2A | February |
TNPSC GROUP 4 | March |
TNPSC GROUP 1 | June |
காலிப்பணியிடம் விவரம்:
Tnpsc group 4: 5255 மற்றும் ( புதிய காலிப்பணியிடமாக 3000 அறிவிப்பு வரும் போது கூடுதலாக வர வாய்ப்பு உள்ளது என்று கூறினார்
Tnpsc group 2,2A: 5831
முக்கிய விவரங்கள்
- பிப்ரவரி மாதம் குரூப் 2 தேர்வும், மார்ச்சில் குரூப் 4 தேர்வும் அறிவிக்கப்படும்
- 2022 ஆம் ஆண்டு 32 வகையான தேர்வு
- அறிவிப்பு வந்து 75 நாட்கள் பிறகு தேர்வு வைக்கப்படும்
- தேர்வு மையங்களில் இருந்து விடைத்தாள்கள் GPS பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் கொண்டு வரப்படும்.
- தேர்வுகள் அனைவரும் OTR உடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம்
- OMR விடைத்தாளில் உள்ள தேர்வர்களின் தனிப்பட்ட விவரம் இனி, தேர்வு முடிந்தபின் தனியாக பிரிக்கப்படும். இதனால் முறைகேடுகள் நடப்பது தவிற்க்கப்படும்.
- அனைத்து தேர்வுகளிலும் தமிழ் தகுதி தேர்வு உண்டு
- Tnpsc group 4 தேர்வுக்கு 100 தமிழ் கேள்விகளில் அனைவரும் 40 எடுப்பது கட்டாயம். மற்றும் அந்த மதிப்பெண் தேர்வு பட்டியலுக்கு எடுத்துகொள்ளப்படும்.
- Tnpsc group 1,2 தேர்வர்களுக்கு தமிழ் தகுதி தேர்வு descriptive முறையில் இருக்கும். இதில் அவர்கள் 40 மதிப்பெண் எடுத்தால் மட்டுமே அவர்கள் முதன்மை தேர்வு தாள் மதிப்பீடு செய்யப்படும். மற்றும் தமிழ் தகுதி தேர்வு மதிப்பெண் தேர்வு பட்டியலுக்கு எடுத்து கொள்ளப்பட மாட்டாது.
Download tnpsc annual planner 2022 pdf
தேர்வர்கள் கவனத்திற்கு. . ..
இந்த வருடம் tnpsc group 2,2A தேர்வுக்கு அதிக காலிப்பணியிடம் வந்து உள்ளது . 2022 ல் நீங்கள் அரசுப்பணி வாங்க இதுவே சரியான தருணம். அதுமட்டுமல்ல tnpsc group 2 மற்றும் group 4 தேர்வு அடுத்து அடுத்து வருவதால் ஒன்று தவறினாலும் மற்றொன்றில் தேர்ச்சி பெற்று விடலாம். ஆகையால் மாணவர்கள் இப்பொழுது இருந்தே படிக்க தொடங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நமது winxclass academy YouTube ல் மாணவர்களுக்கு தொடர்ந்து இலவச மாதிரி தேர்வு கொடுத்து வருவதால் அதையும் பார்த்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி.