TN Ration shop interview 2022 for salesmen & packers Hall ticket Download
TN Ration shop interview 2022 |
Tamil Nadu District Recruitment bureau -2022
Tamilnadu district recruitment bureau interview 2022 for salesmen & packers at 38 district start from December 15,2022. All district interview call letter already published in district drb website.
Download Ration shop interview call letter click here
தமிழ்நாட்டில் உள்ள ரேசன் கடைகளில் காலியாக உள்ள 6000 க்கும் மேற்பட்ட விற்பனையாளர் மற்றும் கட்டுநர் காலிப்பணியிடம் நிரப்ப மாவட்டம் வாரியாக அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் 13 அக்டோபர் 2022 முதல் 14 நவம்பர் 2022 வரை ஆன்லைன் வழியாக பெறப்பட்டது. விண்ணப்பம் செய்தவர்களுக்கு நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்க்க நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.
Selection process:
விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கு மதிப்பெண் என்பது மொத்தம் 100 ஆகும். அது அவர்களுடைய கல்வி தகுதி மதிப்பெண் 50 க்கு மதிப்பிட செய்து, அவர்கள் நேர்காணில் 50 க்கு பெறப்படும் மதிப்பெண்ணோடு சேர்த்து 100 க்கு கணக்கிடப்படும். அதில் அதிக மதிப்பெண் பெறப்பட்டவர்கள் இன சுழற்சி முறைப்படி தேர்வு செய்யப்பட்டு இறுதி பட்டியல் வெளியிடப்படும்.
விற்பனையாளர் கல்வி தகுதி 12th / Diploma என்பதால் அதில் பெற்ற மதிப்பெண்ணும். கட்டுநர் கல்வி தகுதி பத்தாம் வகுப்பு என்பதால் அவர்களுக்கு SSLC மதிப்பெண்ணும் 50 க்கு கணக்கீடு செய்து எடுத்துக் கொள்ளப்படும்.
TN Ration shop interview for salesmen & packers
நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு விண்ணப்பதாரர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய கல்வி , சாதி சான்றிதழ் மற்றும் பிற சான்றிதழ் அசல் மற்றும் நகல் கொண்டு வர வேண்டும். இது பற்றிய தகவல்கள் விண்ணப்பதாரர்கள் நுழைவுச்சீட்டில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
நேர்காணல் என்பது விண்ணப்பதாரர்கள் மனநிலை , அடிப்படை பொது அறிவு எப்படி உள்ளது என்று சோதிக்கவும். மற்றும் தகுந்த கல்வி தகுதியில் போதிய அறிவு உள்ளதா என்று சோதிக்கவும் நடத்தப்படுகிறது. இதற்கு 50 மதிப்பெண்.
தேர்வு குழுவில் உள்ள உறுப்பினர்கள் கேள்விகள் கேட்பார்கள். 3 அல்லது 4 உறுப்பினர்கள் இருப்பார்கள். அவர்கள் கொடுக்கும் சராசரி மதிப்பெண் இறுதி மதிப்பெண்ணாக எடுத்துக் கொள்ளப்படும்.
நேர்காணில் எந்த மாதிரி கேள்விகள் கேட்பார்கள்?
1. Selef introduction
2. கூட்டுறவு சார்ந்த கேள்விகள்
3. ரேசன் கடையில் போடப்படும் பொருட்கள் என்ன? அதன் அளவு & விலை நிலவரம்
4. குடும்ப அட்டை வகைகள்
5. பொது அறிவு கேள்விகள்
6. நடப்பு நிகழ்வுகள்
7. விண்ணப்பதாரர்கள் அவர்களுடைய கல்வி தகுதி சார்ந்த கேள்விகள்
8. மத்திய / மாநில அமைச்சர்கள்
9. முக்கிய தலைவர்கள் பற்றிய குறிப்புகள்
10. தமிழ் இலக்கியம் சார்ந்த கேள்விகள்
11. தங்களுடைய மாவட்டம் சார்ந்த தகவல்கள்
12. ஒரே நாடு ஒரு ரேசன் அட்டை பற்றிய தகவல்கள்
13. உணவு பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சார்ந்த தகவல்கள்
இப்படி மேற்குறிப்பிட்ட பகுதிகள் மற்றும் பிற பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். தோராயமாக ஒருவருக்கு 5 முதல் 10 கேள்விகள் கேட்கப்படலாம்.. விண்ணப்பதாரர்கள் கூறும் சரியான பதிலை பொருத்து மதிப்பெண் வழங்கப்படும்.
Note: ஒருவருக்கு எத்தனை கேள்விகள் கேட்க வேண்டும் என்றோ அல்லது எந்த பகுதியில் கேள்விகள் கேட்க வேண்டும் என்றோ எந்த வரை முறையும் இல்லை. நேர்காணில் உள்ள அதிகாரிகள் கேட்பதே இறுதி முடிவு.
நேர்காணில் முழு மதிப்பெண் பெற பயனுள்ள வகையில் Winxclass Academy YouTube சேனலில் பல வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதை பார்த்து நேர்காணில் முழு மதிப்பெண் பெற்று ரேசன் கடை வேலையில் சேர வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறோம்.