TNPSC ANNUAL PLANNER 2023 வெளியீடு/ TNPSC GROUP 4 நவம்பரில் அறிவிப்பு வெளியிடப்படும்

TNPSC ANNUAL Planner 2023

tnpsc annual planner 2023
TNPSC ANNUAL PLANNER 2023

TNPSC ANNUAL PLANNER 2023

Tamil Nadu Public Service Commission released tnpsc annual planner 2023 on 15 December 2022.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2023 ஆண்டிற்கான திட்ட அறிக்கை 15.12.2022 வெளியிட்டுள்ளது.  அதில் புதிதாக  11 தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலிப்பணியிடம், அறிவிப்பு, தேர்வு , தேர்வு முடிவுகள் எப்பொழுது என்று விரிவான ஆண்டு திட்ட அறிக்கை வெளியிட்டுள்ளது. 
மேலும் இதில் குறிப்பிட்டுள்ள தேர்வுகள் மற்றும் காலிப்பணியிடம் தோராயமானது என்றும் மாற்றம் வர வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
tnpsc annual planner 2023
TNPSC ANNUAL PLANNER 2023

Download TNPSC Annual Planner 2023 Pdf click here

TNPSC Group 4 Notification 2023 எப்பொழுது? 

பல லட்சம் தேர்வர்கள் எதிர்பார்த்த குரூப் 4 தேர்வானது நவம்பர் 2023 ல் அறிவிப்பு வெளியிடப்பட்டு, தேர்வானது அடுத்த வருடம் 2024 பிப்ரவரி ல் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தோராயமான காலிப்பணியிடம் விவரம் தெரிவிக்கவில்லை. 
மேலும் 2022 ஆண்டு நடந்த குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த மாதம் இறுதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

TNPSC Group 2,2A Notification 2023 எப்பொழுது? 

2023 ஆண்டு திட்ட அறிக்கையில் குரூப் 2,2A தேர்வு குறிப்பிடப்படவில்லை. ஆகையால் வரும் 2023 ல் இந்த தேர்வு இல்லை என்பது உறுதியாகிறது. 
மேலும் 2022 ஆம் ஆண்டு நடந்து குரூப் 2 , 2A தேர்வுக்கு முதன்மை எழுத்து தேர்வு 25.02.2023 ல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் முதன்மை தேர்வு முடிந்து அதன் தேர்வு முடிவுகள் வெளியிட்டு, பணி நியமனம் கொடுக்க 2023 இறுதி கடந்து விடும் என்று தெரிகிறது. 

தேர்வர்கள்  கருத்து என்ன? 

இரண்டு வருடங்கள் கொரானா காலத்தில் TNPSC Group 2,4 தேர்வு நடைபெறவில்லை. அதன்பிறகு 2022 ல் TNPSC Group 2,4 தேர்வுகள் அடுத்தடுத்து 2022 ல் வைக்கப்பட்டது. அதேபோல் 2023 ல்  குரூப் 2,4 தேர்வு வரும் என்று பல லட்சம் தேர்வர்கள் தமிழகத்தில் எதிர்பார்த்த நிலையில். 
வரும் 2023 ல் குரூப் 2 தேர்வு அறிவிப்பு இல்லை என்பதும். குரூப் 4  தேர்வு அறிவிப்பு 2023 நவம்பரில் ல் வந்தாலும். அதனுடைய எழுத்து தேர்வு 2024 பிப்ரவரி ல் தான் நடைபெறும் என்பதால் ஒரு வருடம் தேர்வு இல்லை என்பது பெறும் கவலை அளிப்பதாக தெரிவிக்கின்றனர்.  சரி குரூப் 4 க்கு படிக்கலாம் என்றால் காலிப்பணியிடம் எவ்வளவு என்று தெரியவில்லை என்பதும் வேதனையை அதிகரிக்கிறது என்றும் கூறுகின்றனர். 

தேர்வர்கள் என்ன செய்யலாம்… 

தமிழகத்தில் பெரும்பாலும் TNPSC தேர்வுக்கு மட்டுமே படிக்கின்றனர். மத்திய அரசு தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் எண்ணிக்கை மிக குறைவு. ஆனால் மத்திய அரசு வேலைவாய்ப்பில் தோராயமாக 10 லட்சம் காலிப்பணியிடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை நிரப்ப பல்வேறு அறிவிப்புகள் வருகின்றன. உதாரணம் SSC GD CONSTABLE தேர்வுக்கு 40000 க்கும் மேல் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தகுதி. இதேபோல் RRB, SSC, IBPS, UPSC ல் தேர்வுகள் வருகின்றன. 2023 ல் அதிக காலிப்பணியிடம் மத்திய அரசு நிரப்ப உள்ளது.ஆகையால் தமிழக மாணவர்கள் கொஞ்சம் மத்திய அரசு தேர்வுகளுக்கும் தயாராகலாம் என்று கல்வி வல்லுநர்கள் தங்கள் ஆலோசனை தெரிவிக்கின்றனர். 

Leave a Reply