TNPSC Revised Annual planner 2023 வெளியீடு/ Group 1 தேர்வுக்கான அறிவிப்பு ஆகஸ்டில் வெளியிடப்படும்

TNPSC NEW REVISED ANNUAL PLANNER 2023 இன்று 20.12.2022 ல் வெளியிடப்பட்டுள்ளது

tnpsc
TNPSC Revised Annual planner 2023

TNPSC  Update ANNUAL PLANNER 2023

Tamil Nadu public service commission released tentative annual planner 2023 at 15.12.2022. Again tnpsc published Updated tentative annual recruitment planner 2023 at 20.12.2022( Today) 

TNPSC  Annual planner 2023

TNPSC Annual planner 2023 ஐ கடந்த 15.12.2022 அன்று வெளியிடப்பட்டது. அதில் 2023 ஆண்டு 11 தேர்வுகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. குரூப் 4 தேர்வு தவிர மற்ற தேர்வுகளில் காலிப்பணியிடம் விவரங்கள் அதில் கூறப்பட்டு இருந்தது. அதன்படி குரூப் 4 தவிர மீதம் உள்ள 10 தேர்வுகளின் காலிப்பணியிடம் 1754 மட்டுமே அறிவிக்கப்பட்டு இருந்தது. 
பல லட்சம் தேர்வர்கள் எதிர்பார்த்து கொண்டு இருந்த குரூப் 1, குரூப் 2, குரூப் 4 தேர்வு இல்லை. குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மட்டும் நவம்பர் 2023 வரும் என்றும் தேர்வு பிப்ரவரி 2024 ல் நடக்கும் என்றும் தெரிவிக்கப்படு இருந்தது. 

தேர்வர்கள் அதிருப்தி! 

தமிழ்நாட்டில் குரூப் 1,2,4 தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் மத்தியில் இது பெரும் அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. ஆகையால் தேர்வர்கள் குரூப் 1,2 4 தேர்வுகள் 2023 நடத்த வேண்டும் என்றும் மேலும் காலிப்பணியிடம் அதிகரிக்க வேண்டும் என்றும் TNPSC தேர்வுக்கு படிக்கும்  பல லட்சம் மாணவர்கள் தமிழக அரசுக்கும், டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்திற்கும் கோரிக்கை வைத்தனர். சில அரசியல் தலைவர்களும் இது பற்றி தமிழக அரசுக்கு அறிக்கை வாயிலாக கோரிக்கை விடுத்தனர். 

TNPSC NEW ANNUAL PLANNER 2023 வெளியீடு

மாணவர்கள் வைத்த கோரிக்கை அடுத்து TNPSC தேர்வாணையம் இன்று (20.12.2022) புதிய ஆண்டு திட்ட அறிக்கை 2023 வெளியிட்டுள்ளது.  அதில் புதிதாக குரூப் 1 தேர்வு அறிவிப்பு  ஆகஸ்ட் 2023 ல் வெளியிடப்படும் என்றும். குரூப் 4 தேர்வு நவம்பர் 2023 ல் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 
tnpsc annual planner 2023
TNPSC UPDATE ANNUAL PLANNER 2023

Download TNPSC Update Annual planner 2023( 20.12.2022) Click here

புதிய TNPSC ANNUAL PLANNER 2023 பற்றி தேர்வர்கள் கருத்து

TNPSC Group 1 தேர்வு 2023 ல் நடத்தப்படும் என்ற அறிவிப்பு கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறது என்றும். ஆனால் குரூப் 4 தேர்வு 2024 பிப்ரவரி நடத்தப்படும் என்பதும், குரூப் 2 அறிவிப்பு இல்லை என்பதும் எங்களுக்கு பெரும் வருத்தம் அளிக்கிறது என்றும்  TNPSC க்கு படிக்கும் தேர்வர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அறிவிப்பில் வந்துள்ள பல தேர்வுகளின் காலிப்பணியிடம் குறைவாக உள்ளது என்றும் கூறுகின்றனர். சிலர் இது வெறும் கண்துடைப்பு என்றும் கருத்து தெரிவிக்கின்றனர். 
தமிழகத்தில் அரசு துறைகளில் தோராயமாக 3.5 லட்சம் காலிப்பணியிடம் உள்ளது என்றும். அதை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர். ஆண்டுக்கு குறைந்தது 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் காலிப்பணியிடம் TNPSC மூலமாக நிரப்ப வேண்டும் என்றும் தேர்வர்கள் கோரிக்கை வைக்கின்றனர். 

Leave a Reply