TNPSC Group 2 & Group 4 Result 2022 / Download Selection list pdf/Counselling/ TNPSC அதிகாரிகள் தகவல்

TNPSC Group 2,4 Result 2022 / Selection list / Counselling / TNPSC அதிகாரிகள் தகவல்

TNPSC Group 2 Result 2022
TNPSC Group 2 Result 2022

Tamil Nadu public service commission conducted the examination of Group 2,2A and tnpsc group 4,VAO Examination 2022

TNPSC Group 2 Result 2022 எப்பொழுது? 

TNPSC GROUP 2,2A தேர்வானது தமிழ்நாடு அரசு  தேர்வாணையம் மே 21, 2022 ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் நடத்தியது. இந்த தேர்வுக்கு தமிழகம் முழுவதும் படித்த பட்டதாரிகள் 9 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதினார். இந்த தேர்வு இரு தேர்வுகளை கொண்டது. முதல்நிலை ( Preliminary examination) மற்றும் முதன்மை தேர்வு ( Main written examination)  ஆகிய தேர்வுகள் கொண்ட Group 2,2A தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் இறுதியில் வெளியிடப்படும் என்று தேர்வாணையத்தால் கூறுப்பட்டு இருந்த நிலையில் கடந்த நான்கு மாதங்கள் ஆகியும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட வில்லை. 
இந்த TNPSC Group 2, 2A தேர்வு முடிவை எதிர்பார்த்து  பல லட்சம் தேர்வர்கள் காத்திருக்கின்றனர். தேர்வு முடிவுகள் காலதாமதம் ஏற்பட  பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. 
1. பெண்களுக்கான 30℅ இட ஒதுக்கீடு பின்பற்றும் முறையில் உள்ள குளறுபடி காரணமாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது
2. நிர்வாக காரணங்கள்
3. ஸ்கேனிங் மிஷன் கோளாறு
4. TNPSC தேர்வாணையத்தில் ஆட்கள் பற்றாக்குறை
இப்படி பல்வேறு காரணங்களால் கூறப்படுகிறது.  முக்கிய காரணமாக மாக இருந்த பெண்கள் இட ஒதுக்கீடு 30℅ வழக்கு முடிந்தது. அதை பின்பற்ற தமிழக அரசும் ஒப்புக் கொண்டுள்ளது.  இட ஒதுக்கீடு பின்பற்ற தொழில்நுட்ப சாப்ட்வேர் தாயார் செய்ய சிறிது காலம் தேவைப்பட்டு இருக்கலாம். அந்த Software உருவாக்கப்பட்டு குறைவான காலிப்பணியிடங்கள் உள்ள தேர்வுகளுக்கு தேர்வு முடிவுகள் Demo( பரிசார்த்த) முறையில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் குரூப் 2,2A முடிவுகள் மட்டும் ஏன் வெளியிடப்படவில்லை என்று தேர்வர்கள் கேள்வி எழுப்புகின்றனர். 
TNPSC தனது Result Declaration schedule ல் மாதம் மாதம் வெளியிடுகிறது. கடந்த நான்கு மாதங்களாக ஒவ்வொரு மாதமும் தேர்வு முடிவுகள் வரும் என்று கூறி அதன் படி வெளியிடவில்லை. இதனால் தேர்வு எழுதிய பல லட்சம் தேர்வர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி  உள்ளனர். தேர்வாணையம் மீது கடும் கோபமும் மற்றும் அதிருப்தி அடைந்து உள்ளனர். 

TNPSC Group 4 Result 2022 எப்பொழுது? 

இதேபோல் TNPSC Group 4 தேர்வும் கடந்த ஜூலை 24 ந்தேதி நடத்தப்பட்டது. இதன் தேர்வு முடிவுகள் அக்டோபரில் வரும் என்று எதிர்பார்த்த நிலையில் இதன் முடிவுகள் டிசம்பர் ல் வெளியிடப்படும் என்று தேர்வாணையம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த தேர்வு பத்தாம் வகுப்பு தகுதி கொண்ட தேர்வு என்பதால் தமிழகம் முழுவதும் 18 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் தேர்வு எழுதி தேர்வு முடிவுகள் எப்பொழுது வரும் என்று காத்துக்கொண்டு இருக்கின்றனர். 

TNPSC தேர்வாணைய அதிகாரிகள் தகவல்

TNPSC Group 2 , 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் இறுதியில் வெளியிடப்படும் என்றும் இந்த தேர்வு முடிவுகளில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அமல் படுத்தப்படும் என்று TNPSC  அதிகாரிகள் தெரவித்ததாக ஊடக மற்றும் பத்திரிகை செய்திகள் வந்துள்ளது. 

TNPSC GROUP 2,4 Result 2022 எப்பொழுது வரலாம்?

TNPSC Group 2,4 தேர்வு முடிவுகள் இரண்டும் அக்டோபர் மாதம் இறுதியில் வரும் என்று கூறப்பட்டாலும். Group 2,2A தேர்வு முடிவுகள் அக்டோபர் இறுதியிலும், GROUP 4,VAO தேர்வு முடிவுகள் டிசம்பரிலும் வர வாய்ப்புகள் உள்ளது. 

தேர்வு முடிவுகள் எப்படி பார்ப்பது? 

TNPSC Official website www.tnpsc.gov.in என்ற இணையத்தளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்படும் , அவர்கள் பதிவு எண் வைத்து தேர்வு முடிவுகள் தெரிந்து கொள்ளலாம். 
Check TNPSC Group 2,4 Result 2022/ Download selection list pdf click here

Leave a Reply