tnpsc group 4 2023 காலிப்பணியிடங்களை 30000 ஆக உயர்த்த கோரிக்கை:
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் மூலமாக இந்தாண்டு 10,117 காலிப்பணியிடங்கள் மட்டும் நிரப்ப இருக்கும் நிலையில் கட்டாயமாக 30000 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
Tnpsc group 4:
தமிழகத்தில் கொரோனா பெருந் தொற்று காரணமாக கடந்த 3 வருடமாக tnpsc தேர்வில் எந்த தகுதி தேர்வும் நடத்தவில்லை இந்த நிலையில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு tnpsc group 4 தேர்வு கடந்த ஆண்டு நடத்தப்பட்டது.
குரூப் 4 தேர்வின் அடிப்படையில் இந்த ஆண்டு 10117 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு இருப்பதாக tnpsc சார்பில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் குரூப் 4 தேர்வின் மூலமாக 10000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்த நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக காலிப்பணியிடங்கள் எதுவும் நிரப்பப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டிருந்த காரணத்தினால் எக்கச்சக்கமான காலிப்பணியிடங்கள் நிரப்பபடாமல் இருக்கிறது
அரசு ஊழியர்களும் ஓய்வு பெற்றிருக்கும் நிலையில் காலிப்பணியிடங்களானது எண்ணிக்கை 3 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கிறது. இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வழி வகைகளை அரசு மேற்கொள்ளாமல் இந்த ஆண்டில் 10117 காலிப்பணியிடங்கள் மட்டும் நிரப்பபடுவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
அரசு முதற்கட்டமாக 30000 பேருக்கு வேலைவாய்ப்புகளை இந்த ஆண்டிலேயே ஏற்படுத்தி தருவதற்கான வழி வகையை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது.
also check
latest Tamilnadu government jobs 2023 click here