தமிழ்நாடு பொதுத்துறை பணியிடங்கள் இனி TNPSC மூலம் நிரப்பப்படும்

தமிழ்நாடு பொதுப்பணித்துறை பணியிடத்தை இனி டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும். 

Tnpsc
பொதுத்துறை பணியிடங்கள் tnpsc மூலம் நிரப்பப்படும்
இன்று 07.01.2022 தமிழக சட்டப்பேரவையில் மாண்புமிகு தமிழ்நாடு மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முக்கிய சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். 
அதில் தமிழ்நாடு மின்சார வாரியம் தேர்வு(TNEB) , தமிழ்நாடு போக்குவரத்து பணியிடங்கள் (TNSTC), ஆவின் ( Aavin), தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் போன்ற இன்னும் சில துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ( tamilnadu public service commission) மூலமாக தேர்வுகள் வைத்து நிரப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

TNEB தேர்வுகள்:

Tamilnadu electricity board ( தமிழ்நாடு மின்சார வாரியம்) த்தில் உள்ள காலிப்பணியிடம் இதுவரை TANGEDCO மூலமாக தேர்வு வைத்து எடுக்கப்பட்டது. அதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு உள்ளதாலும் மேலும் சரியான முறையில் தேர்வை நடத்தாமல் இருப்பதாலும் இனி மின்சார வாரியத்தில் உள்ள பணியிடங்கள் TNPSC மூலமாக நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

 Download Tnpsc annual planner 2022 pdf click here

Aavin தேர்வுகள்:

தமிழ்நாடு ஆவின் காலிப்பணியிடம் நிரப்புவதில் பல்வேறு முறைகேடுகள் நடந்து இருப்பதாகவும். முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது உள்ளதாலும். வேலை வாங்கி தருவதாக பல கோடி மோசடி நடந்து இருப்பதாலும். இனி முறைகேடுகள் நடக்காமல் தடுக்க TNPSC மூலமாக தேர்வுகள் வைத்து காலிப்பணியிடம் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. 
இது போல போக்குவரத்து துறை( tamilnadu transport corporation) மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ( tamilnadu housing board) காலிப்பணியிடம் இனி TNPSC மூலம் நடத்த சட்ட திருத்தம் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. 

TNPSC GROUP 2,2A மற்றும் TNPSC GROUP 4 VAO VACANCY அதிகரிக்குமா? 

 சில பதவிகள் பத்தாம் வகுப்பு தகுதி கொண்டது மற்றும் சில பட்டப்படிப்பு தகுதி கொண்டதை tnpsc group 2,4 ல் சேர்க்கும் போது இந்த வருடம் 2022 ல் காலிப்பணியிடம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சில தேர்வுகள் tnpsc ல் தனியாக வைக்க வாய்ப்பு உள்ளது. 

Syllabus ( பாடத்திட்டம்) 

தமிழ் தகுதி தேர்வு  ல் எந்த மாற்றமும் இருக்காது. முதன்மைத் பாடத்திட்டம் TNPSC புதிதாக வகுக்கும். அது எற்கனவே வந்துள்ள பாடத்திட்டத்தை ஒத்து இருக்கும். தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு எளிதாகவே இருக்கும். 
Download tnpsc new syllabus 2022 pdf click here

தேர்வர்கள் கருத்து:

Tnpsc தேர்வுக்கு படித்து கொண்டு இருக்கும் மாணவர்கள் பலர் இதை வரவேற்பு கொடுத்து உள்ளனர். அரசுப் பணி வாங்குவது இனி எளிதாக இருக்கும்.
இந்த தேர்வுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேர்மையான முறையில் முறைகேடு இல்லாமல் நடத்தினால் பல லட்சம் தமிழக மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். 
TNPSC OFFICIAL WEBSITE https://www.tnpsc.gov.in/

தமிழர்கள் வேலை தமிழருக்கே… 

ஏற்கனவே தமிழகத்தில் நடக்கும் அனைத்து அரசு போட்டித் தேர்விலும் கட்டாய தமிழ் தகுதி தேர்வு ( tamil eligibility test) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 
Tnpsc இலவச மாதிரி தேர்வு எழுதி பார்க்க click here

Leave a Reply