TNTET Exam Date 2022 For Paper 2 online exam/ Hall ticket & Exam schedule
TNTET EXAM DATE 2022 |
Tamil Nadu Teacher Eligibility Test 2022 For Paper 2 Exam date tentatively December 2022
TNTET 2022 PAPER 1:
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1,2 நடத்துவதற்கு அறிவிப்புகளை வெளியிட்டு கடந்த அக்டோபர் மாதம் TNTET PAPER 1 தேர்வை முதல் முறையாக ஆன்லைன் வழியில் கடந்த அக்டோபர் 14 முதல் அக்டோபர் 19 வரை நடத்தி முடித்துள்ளது. இந்த தேர்வை சுமாக 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதியதாக கூறப்படுகிறது.
அடுத்து தாள் 2 தேர்வு எப்பொழுது என்று ஆசிரியர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது அதற்கு பதில் அளிக்கும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.
TNTET EXAM DATE 2022 PAPER 2
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 மட்டும் சுமார் 4 லட்சம் தேர்வர்கள் விண்ணப்பம் செய்து உள்ளதால். இந்த தேர்வை ஆன்லைன் தேர்வாக வைக்க அதிக தேர்வு மையங்கள் தேவைப்படும். மேலும் பல்வேறு கட்டங்களாக ( Batch wise) நடத்த கூடுதல் நாட்கள் தேவைப்படும். இந்த நாட்களில் வேறு ஏதேனும் போட்டி தேர்வு இருத்தல் கூடாது
மேலும் தேர்வு மையங்கள் கல்லூரிகளில் பெரும்பாலும் இருப்பதால், அங்கு படிக்கும் மாணவர்கள் செமஸ்டர் தேர்வு முடிந்து இருக்க வேண்டும். அப்போது தான் கல்லூரிகளில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு கிடைக்கும். இது போன்று பல்வேறு சூழ்நிலை கருத்தில் கொண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் , ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 வை டிசம்பரில் நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
TNTET Exam Date 2022 Tentative for paper 1
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 டிசம்பர் 16 முதல் 24 வரை நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. ஆனால் முறையான தேர்வு அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் வெளியிடும். அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்த பின்பே தேர்வு தேதி உறுதிப்படுத்த முடியும்.
TNTET Hall ticket 2022 paper 2
தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பு தேர்வு அட்டவணை ( Exam schedule) வர வாய்ப்பு உள்ளது. தேர்வுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு Hall ticket without venue வெளியிடப்படும். தேர்வுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு Hall ticket with venue வெளியிடப்படும்.
TNTET EXAM schedule & Hall ticket 2022
TNTET EXAM 2022 | Date & Link |
---|---|
TNTET 2022 Notification date | 07.03.2022 |
Date of examination TNTET Paper-1 | 14.09.2022 |
Date of examination TNTET Paper 2(Tentative) | December 2022( 3rd week) |
Download Hall ticket tntet paper 2 | click here |