TNPSC Group 4 Result 2022 எப்பொழுது வெளியாகும்?
TNPSC Group 4 Result 2022 |
TNPSC GROUP 4 Exam 2022
Tamil Nadu public service commission conducted the group 4 & vao examination 2022 , July 24.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வை கடந்த ஜூலை 24 ந்தேதி தமிழகம் முழுவதும் நடத்தியது. இந்த தேர்வு பத்தாம் வகுப்பு தகுதி கொண்டதால் தமிழகம் முழுவதும் சுமார் 18 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். இந்த தேர்வுக்கான தேர்வு முடிவுகள் அக்டோபரில் வெளியிடப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மகளிர் இட ஒதுக்கீடு 30℅ சரியாக பின்பற்ற வில்லை என்று தேர்வர்கள் குற்றம் சாட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். அதற்கு நீதிமன்றம் இட ஒதுக்கீடு சரியாக பின்பற்ற சொல்லி 3 மாதம் காலக்கெடு கொடுத்து தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பின் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிட டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தனது Software update செய்ய கால அவகாசம் தேவைப்படும் என்று தேர்வு முடிவுகள் வெளியீட்டை டிசம்பருக்கு தள்ளி வைத்தது.
இதற்கிடையில் Software update செய்து முடித்து குரூப் 2 தேர்வு முடிவுகள் உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வெளியிடப்பட்டு விட்டது. இப்பொழுது குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிட வேண்டும். ஏற்கனவே Software update முடிந்து குரூப் 2 முடிவுகள் வந்து விட்டதால் குரூப் 4 முடிவுகள் இந்த மாதம் டிசம்பரில் உறுதியாக வரும் என்று தேர்வர்கள் காத்து கொண்டு இருக்கின்றனர்.
டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய தலைவர் பதவியும், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பதவியும் காலியாக உள்ளதால் தேர்வாணைய பணிகளில் சிறிது தோய்வு எற்ப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
TNPSC ANNUAL PLANNER 2023?
TNPSC Annual planner 2023 எப்பொழுது வெளிவரும் என்று TNPSC தேர்வுக்கு படிக்கும் பல லட்சம் தேர்வர்கள் காத்து கொண்டு இருக்கின்றனர். அடுத்தாண்டு Group 1,2,4 தேர்வு எப்பொழுது வரும்? எவ்வளவு காலிப்பணியிடம் வரும் என்று எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். ஆனால் TNPSC இதுவரை TNPSC Annual planner 2023 வெளியிடவில்லை.
ஆனால் கடந்த ஆண்டு டிசம்பர் முதல் வாரத்தில் ஆண்டு திட்ட அறிக்கை 2022 வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை வெளியிடவில்லை. இதற்கு காரணம் டிஎன்பிஎஸ்சி தேர்வாணை தலைவர் மற்றும் தேர்வு கட்டுபாட்டு அதிகாரி பதவிகள் நிரப்ப படாமல் இருப்பதே காரணம் என்று தேர்வர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த மாதம் இறுதிக்குள் ஆண்டு திட்ட அறிக்கை வெளிவர வாய்ப்பு உள்ளது.
TNPSC Group 4 Result 2022 எப்பொழுது வரும்?
நவம்பரில் டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட Result Declaration schedule படி இந்த மாதம் குரூப் 4 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளிவர வாய்ப்பு உள்ளது. முதல் வாரம் முடிவடைந்த நிலையில் தேர்வு முடிவுகள் எப்பொழுது வரும் என்று கேள்விக்கு டிசம்பர் மூன்றாம் வாரத்தில் வர வாய்ப்பு உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்ததாக பிரபல செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் டிசம்பர் மூன்றாவது வாரத்தில் குரூப் 4 தேர்வு முடிவுகளை எதிர்பார்க்கலாம்.
Also Check
TNPSC Group 4 Cut off 2022 click here
தேர்வர்கள் கோரிக்கை
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் மற்றும் 2023 ஆண்டு திட்ட அறிக்கை( Annual planner 2023) விரைவில் வெளியிட வேண்டும் என்றும் தேர்வு எழுதிய தேர்வர்கள் கோரிக்கை வைக்கின்றனர். அதுமட்டுமின்றி காலிப்பணியிடங்களை அதிகரிக்கவும் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மற்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
தேர்வு முடிவுகள் தெரிந்து கொள்ள டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்
https://www.tnpsc.gov.in/