TNPSC Group 2 main 2023 Expected Cut off Analysis / Result & Selection list

TNPSC Group 2 main 2023 cut off

Tamil Nadu service commission conducted the TNPSC group 2,2A main examination on 25.02.2023( Saturday). In this article Discuss About of Expected cut off Group 2,2A main examination 2023.

TNPSC Group 2 ,2A Exam 2023

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த 25.02.2023 சனிக்கிழமை குரூப் 2 மற்றும் 2A விற்கான முதன்மைத் தேர்வை நடத்தியது. மொத்த காலிப்பணியிடம் சுமார் 5400 ஆகும்.இந்த தேர்வுக்கான முதல்நிலை தேர்வை கடந்த ஆண்டு மே 21 , 2022 அன்று நடத்தியது. இதில் சுமார் 994890 பேர் கலந்து கொண்டனர். அதில் முதன்மைத் தேர்வுக்கு 57641 பேர் தேர்ச்சி பெற்றனர். முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெற்றவர்களுக்க கடந்த 25.02.023 அன்று தமிழகம் முழுவதும் 20 மாவட்டங்களில் சுமார் 186 தேர்வு மையங்கள் அமைத்து தேர்வு நடத்தப்பட்டது.

இந்த தேர்வு இரண்டு பகுதிகள் கொண்டது

  1. Tamil Eligibility Test( Descriptive Type)
  2. Main Written Exam( Descriptive type)

காலையில் தமிழ் தகுதி தேர்வும், மதியம் முதன்மை எழுத்து தேர்வும் நடந்தது.

TNPSC Group 2 Main 2023 தேர்வில் குளறுபடி?

காலையில் 9.30 க்கு தொடங்க வேண்டிய தமிழ் தகுதி தேர்வு மாணவர்கள் வினாத்தாள் பதிவெண் குளறுபடியால் 30 நிமிடம் முதல் சில இடங்களில் 1 மணி நேரம் தேர்வு தொடங்க காலதாமதம் ஆனதாக கூறப்படுகிறது. மாணவர்கள் கையில் வினாத்தாள் கொடுத்து திருப்பி வாங்கப்பட்டதால், மாணவர்கள் சிலர் கேள்விக்கான விடைகளை புத்தகம் மற்றும் மொபைல் வழியாக பார்த்துவிட்டு மீண்டும் தேர்வு தொடங்கும் போது எழுதியதாக கூறப்படுகிறது. தேர்வு காலதாமதம் தொடர்பாக TNPSC விளக்கம் கொடுத்துள்ளது. அதில் காலதாமதம் ஆனதால் 2.30 மணிக்கு மதிய தேர்வு தொடங்கி மாலை 5.30 மணி வரை தேர்வு சுமூகமாக நடந்தது என்று கூறியுள்ளது. இந்த குளறுபடிக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது. மேலும் முற்பகலில் நடந்த தமிழ் தகுதி தேர்வு விடைத்தாள் திருத்தும் போது மாணவர்களின் நேயமான கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

முற்பகலில் நடந்த தமிழ் தகுதி தேர்வு வில் மாணவர்கள் குறைந்த பட்ச தகுதி மதிப்பெண் எடுத்தால் போதுமானது. இது Rank க்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்றும், மதியம் நடந்த முதன்மை தேர்வு மட்டுமே இறுதி பட்டியலுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும். மதியம் நடந்த முதன்மை எழுத்து தேர்வில் எந்த குளறுபடியும் நடக்கவில்லை என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கூறியுள்ளது

TNPSC Group 2 main 2023 தேர்வு வினாத்தாள் எப்படி இருந்தது?

தேர்வு எழுதிய பெரும்பாலான மாணவர்கள் General Studies studies தேர்வு சற்று கடினமாக இருந்தது என்றும். சில மாணவர்கள் தேர்வு எளிமையாக இருந்தது என்றும் கூறுகின்றனர். எதிர்பார்த்த பல பகுதிகளில் இருந்து வினாக்கள் வரவில்லை என்றும் ஆனால் நடப்பு நிகழ்வுகள் சார்ந்த பொது அறிவு, அரசு திட்டங்கள் கேள்விகள் இருந்தது என்றும் கூறியுள்ளனர். பொதுவாக தேர்வு பரவாயில்லை என்ற ரகத்தில் இருந்துள்ளது.

TNPSC Group 2,2A Main 2023 Expected cut off

மொத்த காலிப்பணியிடம் சுமார் 5400 பணியிடங்களில் சுமார் 5286 பணியிடங்கள் நேர்காணல் அல்லாத பதவி ஆகும்.Notமீதி உள்ள சுமார் 120 பணியிடங்கள் மட்டுமே நேர்காணல் கொண்டவை

கட்டாய தமிழ் தகுதி தேர்வில் குறைந்த பட்சம் 40℅ சதவீதம் மதிப்பெண் எடுத்தால் போதும். மேலும் அது Rank க்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. மேலும் தமிழ் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே முதன்மை தேர்வு விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும்

கீழே கொடுக்கப்பட்ட கட் ஆப் என்பது மதியம் நடந்த General studies ( Descriptive type) தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது.

TNPSC Group 2 Main Expected cut off 2023( Interview post)

communityExpected Cut off( Out off 300)
UR/OC185+
BC180+
BCM170+
MBC/DNC175+
SC160+
SCA150+
ST145+
TNPSC Group 2 Main Expected cut off 2023

TNPSC Group 2A Main Exam 2023 Expected cut off( Non Interview post)

communityExpected Cut off( out of 300)
UR/OC160+
BC148+
BCM140+
MBC/DNC145+
SC135+
SCA130+
ST125+
TNPSC Group 2A Main Expected cut off 2023

Note:1

1.இது தோராயமான கணிப்பு மட்டுமே. அதிகாரபூர்வ Cut off அல்ல

2. ஒன்றாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு PSTM Cut Off குறைவாக வர வாய்ப்பு உள்ளது. மேலே குறிப்பிட்ட மதிப்பெண்ணை விட 10 மதிப்பெண் குறைவாக கூட வரலாம்.

3. மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர், முன்னாள் இராணுவத்தினருக்கு Cut Off 10 மதிப்பெண் குறைவாக வர வாய்ப்பு உள்ளது

4. மேலே குறிப்பிட்ட Cut off (-5, +5) மாற்றம் வரலாம்

TNPSC group 2 Main Result 2023 எப்பொழுது வரும்?

குரூப் 2 முதன்மை எழுத்து தேர்வு விரிந்துரைக்கும் வகையில் உள்ளது மேலும் சுமார் 55 ஆயிரம் பேருக்கு மேல் தேர்வு எழுதி உள்ளனர். இந்த விடைத்தாளை Scan செய்து பின்னர் மதிப்பீடு செய்ய வேண்டும். இதற்கு குறைந்த பட்சம் ஆறு மாதங்கள் ஆகலாம். ஆகையால் வரும் ஆகஸ்ட் 2023 அல்லது செப்டம்பர் 2023 ல் இதற்கான தேர்வு முடிவுகள் எதிர்பார்க்கலாம். ஆனால் கடந்த ஒரு வருட காலங்களில் பல தேர்வுகளின் தேர்வு முடிவுகள் பல மாதங்கள் கழித்தே வெளியிடப்படுகிறது. ஆகையால் குரூப் 2,2A முதன்மை எழுத்து தேர்வு இந்த வருடம் இறுதியில் வந்தாலே பெரிய விஷயம் ஆகும்.

மேலும் தேர்வு முடிவுகள் தெரிந்துகொள்ள மற்றும் TNPSC GROUP 2,2A Merit List பதிவிறக்கம் செய்ய TNPSC அதிகார பூர்வ இணையதளத்தை தொடர்ந்து பாருங்கள் http://www.tnpsc.gov.in

Leave a Reply