TNTET 2022 Paper 2 Result published/ ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 முடிவுகள் வெளியீடு

TNTET 2022 Paper 2 Results published

Tamil Nadu Teacher Recruitment board released teacher eligibility test results for paper 2

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 ற்கான தேர்வு முடிவுகள் மற்றும் இறுதி விடைக் குறிப்புகள் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பல லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வுக்கான முடிவுகள் 28.03.2023 ல் வெளியிட்டுள்ளது. ஆசிரியர்கள் OC பிரிவில் இருந்தால் 90 மதிப்பெண்ணும் மற்ற அனைத்து பிரிவினருக்கும் 82 மதிப்பெண்ணும் தகுதி மதிப்பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

TRB TET Paper 2 Result 2022 out

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் 2023 குறித்து கீழ்கண்டவாறு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண்.01/2022, நாள் 07.03.2022ன் படி ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-II ற்கான கணினி வழித்தேர்வுகள் (Computer Based Examination) 03.02.2023 முதல் 15.02.2023 வரை காலை / மாலை இருவேளைகளில் நடத்தப்பட்டது. இத்தேர்வில் 254224 தேர்வர்கள் கலந்து கொண்டனர். தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் (Tentative key Answer) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.nic.in-ல் 22.02.2023 அன்று வெளியிடப்பட்டது.

தற்காலிக விடைக்குறிப்பிற்கு 22.02.2023 முதல் 25.02.2023 பிற்பகல் 5.30 மணி வரை தேர்வர்கள் இணையவழியில் தங்களது ஆட்சேபனைகளை (Objections) தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் மேற்காண் தேதியில் பெறப்பட்ட அனைத்து ஆட்சேபனைகளையும் பாடவாரியாக வல்லுநர்குழு அமைக்கப்பட்டு முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வுக்குப்பின் பாட வல்லுநர்கள் குழுவால் இறுதி செய்யப்பட்ட விடைக்குறிப்புகளின் அடிப்படையில் தேர்வர்களது கணினி வழித் தேர்வு விடைத்தாளினை மதிப்பீடு செய்து மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டன.

தற்பொழுது தேர்வு எழுதிய அனைத்து தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இறுதி விடைக்குறிப்புடன் வெளியிடப்படுகிறது.

மேற்கண்டவாறு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

How to check TNTET Paper 2 Result 2022

step 1: Go to Trb official website www.trb.tn.nic.in

Step 2: Click TNTET paper 2 result link

step 3: Open candidates account user login page, and put your Registration id & password correctly then click login

Step :4 click dashboard

Step 5: Click here to download score card

How to check TNTET 2022 Score card

TNTET 2022 Paper 2 resultdate & links
TNTET Notification date07.03.2022
Exam date03.02.2023-15.02.2023
Total number candidates254224
TNTET Paper 2 Tentative key published on22.02.2023
TNTET 2022 Paper 2 Result date & final answer key28.03.2023
Trb official websiteclick here
TNTET Paper 2 result linkclick here
TNTET Paper 2 Result direct link( login page) click here
Download TNTET paper 2 Final Answer key 2022 click here
TNTET 2022 Paper 2 result

TNTET 2022 Result overview

Leave a Reply